சுய இன்பம் அனுபவிப்பதால் பார்வை மங்கிவிடும், ஞாபகமறதி, ஆண்மை அல்லது பெண்மை அழிந்து விடும் உண்மையா?

558

tamil x doctor, tamilkamasoothiram, tamilxdoctor, udaluravu, vinthu neer, vinthu neerththu pothal, vithu varumuthal

பொதுவாக சுய இன்பம் அனுபவிப்போருக்கு அதனுடன் சார்ந்த தேவையற்ற குற்றவுணர்வு பெருகி விடும். அளவுக்கதிகமான குற்றவுணர்வு மறதி, தடுமாற்றம், உடல் நலக்குறைவு போன்றவைகளை உண்டு பண்ணும். அடுத்து உடல் உறவில் ஈடுபடும்போதும், சுய இன்பம் அனுபவிக்கும் போதும் உடம்பிலிருந்து ஆற்றல் செலவாகும். இது கால் பந்து விளையாடினாலும், ஓடினாலும் செலவாகும். ஆற்றலைப் போன்றதே. சரியான உணவு உட்கொண்டு, மனக் குழப்பமில்லாமல், குற்றவுணர்வு இல்லாமல் இருப்போரை இவையெல்லாம் ஒன்றும் செய்வதில்லை.

இந்தியாவில் சுய இன்பம் அனுபவிக்கும் ஆண்கள் பற்றிய புள்ளி விபரம் எதுவும் இல்லை. அமெரிக்காவில் 99% பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள். இதில் திருமணமானவர்களும் அடக்கம்.

சுய இன்பம் செய்வது 24 மணி நேரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்யலாம் எனக் கூற முடியாது. உடல் திறன் எத்தனை முறை உடலுறவு செய்ய அனுமதிக்கின்றதோ, அத்தனை முறை உடலுறவு செய்யலாம். அதுபோல்தான் சுய இன்பமும், உடல் திறனுக்கு ஏற்றவாறு செய்யலாம். நம் சமூகத்தில் சுய இன்பம் தவறானது என்ற கருத்து நிலவுகிறது. இக்கண்ணோட்டத்துடன் அநேகமான மதங்களும் பார்ப்பதால், இது குறித்த, தவறான எண்ணத்திற்கு வலு கூடி வருகிறது.

சுய இன்பம் அனுபவிப்பர்கள், தொடர்ந்து இதில் ஈடுபடு வதால் அவர்கள் உடலுறவு அனுபவிக்க இயலாத நிலைக்கோ, அல்லது பைத்திய நிலைக்கோ ஆளாகிவிடுவர் என்று கூறப் படுவதும், நிச்சயமாக தவறான கருத்தாகும்.

பாலுணர்ச்சியை அடக்க முடியாத கட்டத்திலும் ,உடலுறவுக்குத் துணை இல்லா நிலையிலும் இது ஒரு வடிகாலாக அமைகிறது. ஆனால் நிச்சயமாக பாலுறவு மட்டுமே புத்துணர்வை அளிக்கும். தமக்கு ஏற்ற ஆரோக்கியமான துணையுடன் உடல் உறவு கொள்ளுதல் இன்பமாகும்.

சுயஇன்பம் தொடர்ந்து அனுபவித்து வருபவர்கள் உடலுறவு இன்பத்தை நாடாமல், சுய இன்பத்திலேயே நாட்டம் கொண்டிருந்தால், அவசியம் அவர்கள் மருத்தவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும். ஏனெனில், சுய இன்பத்தின் போது உடல் ரீதியாக உணர்வுகளைத் தூண்டி, பாலியல் பரவச நிலையை தனக்குத் தானே அடைய நேரிடுகிறது. ஆனால் ஆழ்ந்த உணர்ச்சி வசப்படும் நிலை, உடலியல் தேவை, அனைத்தும் ஒரு ஆண் – பெண் உடலுறவு மூலம் மட்டுமே, மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அதிகமாக பெற முடியும்.

விரை வீக்கம் என்பது ‘ஹைட்ரசில்’ எனப்படுவதாகும். இது விரைப்பையில் திரவம் தங்கி விடுவதால் ஏற்படுவதாகும். இதற்கும் சுய இன்பம் செய்வதற்கும் தொடர்பில்லை.